search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி"

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    ஐதராபாத்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாக்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் இருந்தவரும், இந்திய ஜனாதிபதியாக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவுக்கு சென்றுள்ளார். இனி காங்கிரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என குற்றம் சாட்டியுள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    பிரணாப் முகர்ஜி கூறும் கருத்தை ஏற்று ஆர்.எஸ்.எஸ் தன்னை மாற்றிக் கொள்ளுமா என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார். #Nagpur #RSSFunction #PranabMukherjee #Surjewala
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாக்பூர் வந்தடைந்த முன்னள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    அதன்பின், உபச்சார விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசுகையில், தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்கமுடியாது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பிரணாப் முகர்ஜி கூறும் கருத்தை ஏற்று ஆர்.எஸ்.எஸ் தன்னை மாற்றிக் கொள்ளுமா என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு பிரணாப் முகர்ஜி சென்றது கடும் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வரலாற்றை நினைவு கூர்ந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அவர்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்படி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பிரணாப் கருத்தை ஏற்று ஆர்.எஸ்.எஸ் தங்களை மாற்றிக் கொள்ளுமா? இனியாவது அந்த அமைப்பு தங்களின் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #Nagpur #RSSFunction #PranabMukherjee #Surjewala
    ×